Thursday, May 28, 2009

குழந்தைகள் எதிர்காலம் - நூல் அறிமுகம்

ஆசிரியர் : கு. செந்தமிழ் செல்வன்
கட்டுரை முகவரி : செந்தமிழ் செல்வனின் வாசிக்கும் தளம்

ஒரு புத்தகம் வாசித்ததும், என்ன விளைவுகளை வாசகரிடம் உருவாக்குகிறதோ, என்ன செயல்பாட்டிற்கு தூண்டி விடுகிறதோ. அவைகளே அப்புத்தகத்தின் மதிப்பீடாக மாறிவிடுகிறது. அந்த வகையில், ‘குழந்தைகள் எதிர்காலம்’ புத்தகம் வாசித்தவுடன், குழந்தைகளை என் முன்பே புதிய இசை வெள்ளமாக மாற்றியது. எங்கள் குடும்பத்தோடு அலச வேண்டிய பொருளாக்கியது. நம் கண் முன்னே ‘குழந்தை வளர்ப்பு’ எதிர் திசை பயணத்தில் செல்வதை உணர்ந்து கவலை கொள்ளச் செய்தது. அதோடு விடவில்லை, சென்னையில் நாங்கள் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியிலேயே பெற்றோர்கள் சந்திபை நடத்த வைத்தது.
ஷ. அமனஷ்வீலியின் ‘குழந்தைகள் எதிர்காலம்’ வாசிக்கும் எந்தப் பெற்றோரையும், ஆசிரியரையும், சமூக ஆர்வலர்களையும் குழந்தை வளர்ப்பைப் பற்றிய மறுபார்வையை உருவாக்கும். அமனஷ்வீலி சாதாரண ஆரம்பப் பள்ளியாசிரியரல்ல உண்மையில், இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, குழந்தைகள் மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர். ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தரும் முறைகளும், வழிகளும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன. சொவியத் யூனியனில் பள்ளிச் சீர் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது இந்நூலில் குறிப்பிட்டுள்ள வழி முறைகள் பயன் படுத்தப் பட்டது.
‘குழந்தை வளர்ப்பை’ பற்றிய புரிதல்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சிரத்தைக் கொள்ளச் செய்கிறது. பெற்றோர்களை நல்ல ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களை நல்ல பெற்றோர்களாக்கவும் முயற்சிக்கிறது.
புத்தகம் முழுவதும் சிந்தனைச் சிதறல்கள். அவரவர் தேவைக் கேற்ப, சேகரித்துக் கொள்ளலாம். சில சேகரிப்புகள் இதோ.
• குழந்தைகளின் உண்மையான வாழ்க்கை என்பது, அவர்களது மகிழ்ச்சி, அதிர்ப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தனி நபர் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களின் தனித் தன்மை இழக்காமல் வளர்க்க வேண்டும்
• கற்பிக்கும் முறைகள், விஞ்ஞான அடிப்படையில், வாழ்க்கை முன் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் படிப்பதின் மீது குழந்தைகளுக்கே இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அதில் பள்ளி வாழ்வை ஒழுங்கு படுத்தும் பொது அணுகுமுறை வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் பலமுறை வாசித்து பயன் பெற வேண்டிய புத்தகம். திருமணத்தின் போது, பெற்றோராகப் போகும் புதுமண தம்பதியினருக்கு பரிசளிப் பதற்கான அற்புதமான புத்தகம். டாக்டர். இரா. பாஸ்கரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்துள்ள இப்புத்தகத்தை அறிவுப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் விலை ரூ 150/-. புதியக் கல்வியாண்டில் குழந்தைகளை சந்திக்கப் போகும் ஆசிரியர்களுக்கான மனோ நிலையையும் குறிப்பிடுகிறது.
• சிறுவர், சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வமும், எதிர் பார்ப்பும் ஆசிரியர்களின் நெஞ்சங்களின் நிறைந்திருக்க வேண்டும்.
• புதிய போதனை முறைத்திட்டைங்களும், புதிய நம்பிக்கைகளும் அவர்களிடம் உருவாகியிருக்க வேண்டும்.
• கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம் தோன்ற வேண்டும்.
• குழந்தைகளின் சத்தத்தை இன்னிசைக் குழுவின் வாத்தியைங்கள் சுருதிக் கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளை போல கேட்கும் காதுகளை ஆசிரியர்கள் பெற வேண்டும்.
குறும்புக்கார குழந்தைகளைப் பற்றி கவலை கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்களுக்கு அக்குழந்தைகளைப் பற்றி சரியான புரிதலை உருவாக்குகிறது.
குறும்புக் கார குழந்தைகள், நன்கு பழகக் கூடியவர்கள். செயல் முனைப்பான கற்பனையாளர்கள். சுற்றுயுள்ளவற்றை சுயமாகக் கற்கவும், மாற்றியமைக்கவும் விழைபவர்கள். இவர்கள் தான், உண்மையான குழந்தைகள், ஆசிரியர்களின் சிந்தனை, ஆராய்ச்சிப் பொருள்.
இவர்களை, அச்சுறுத்தல் இல்லாமல், அடக்கி ஒடுக்காமல் மாற்றியமைக்கும் வழிமுறைகளை சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளிடம் என்னவகைக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாகும்.
ஆசிரியர்களின் கேள்விகள் தான் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஜீவ அணுவாகும்.
குழந்தை வளர்ப்பில் குடும்பம் மற்றும் பள்ளி வளர்ப்புத் தன்மைகள் எதிராக இருக்கக் கூடாது. கல்வி, குழந்தை வளர்ப்பில் பள்ளி தான் மையம். குடும்பத்திலும் மாற்ற பள்ளிக்கு உரிமை உண்டு.
குழந்தைகளை நல்லவராக வளர்க்க வேண்டும் எனத் தான் எல்லா பெற்றோர்களும் விழைகிறார்கள். ஆனால் உண்மையாக வளர்ப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்களா என்பது தான் கேள்வி. வளர்ப்புப் பணி எளிதானதல்ல. உயர்வான மானுட கோட்பாடுகள் அடிப்படையில் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தான் நமது வளர்ப்புப் பணிகளை வழி நடத்த வேண்டும்.
குழந்தைகள் உணர்ச்சிகரமான ஜீவன்கள். அவர்கள் இன்றைய மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் வாழ்கிறார்கள். அவர்கள் மீது நமது எதிர்காலக் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் திணிக்கூடாது.
குழந்தைகள் மீது மனிதாபிமானம் வேண்டும்.
–மாற்றியமைக்கும் சக்தி வேண்டும்.
–உள்ளாற்றல்களை நம்ப வேண்டும்.
–பொறுமை வேண்டும்.
–இரக்கம் காட்ட வேண்டும்.
–ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
–நமது கூட்டாளியாக்கிக் கொள்ள வேண்டும்.
வளமான, உட்பொருள் மிக்க, பன்முக எதிர்கால சமூகவாழ்விற்கு அவர்களை உட்படுத்த பக்குமாக தயார் படுத்த வேண்டும்.
நிர்பந்திக்காமல், ஆர்வம் ஏற்படுத்துவது கடினமானது தான். இதில் தான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பொறுமையும், கற்பனை சக்தியும் வேண்டும்.
கற்பிப்பது - – எளிதானதுல்ல
- கடினமானதாகக் கருதப்பட வேண்டும்
- நிர்பந்திக்காமல் ஆர்வம் ஏற்படுத்த கடினமானது.
ஒரு ஆசிரியரின் பத்து “மூதுரமொழிகள்”
1. மனிதாபிமான அடிப்படையில் வளர்ப்பு பணி இருக்க வேண்டும்.
- குழந்தை தானாக நம் உதவியாளாராக செய்ய வேண்டும்.
2. கலந்து பழகி
- கூட்டாக தெரிந்து கொள்வது.
3. எந்த லட்சியத்தில் வளர்க்க நினைக்கின்றேமோ
- அதை நாம் வாழ்ந்து, முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
4. ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், மனிதர்கள், மற்றும் தன் மீதான சுய நம்பிக்கைகளை ஊட்டி வளர்க்க வேண்டும்.
5. சமமான, பரஸ்பர உணர்வுகளையும், நண்பர்கள், உறவினர்கள் மீது அக்கறை கொள்ள உணர்வுகளை வளர்க்க வேண்டும்
6. சமூதாயத்தின் ஒரு பங்காக உணர வேண்டும்.
7. நம்மைப் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு கடினம். நாம் தான் குழந்தைகளை புரிஎது கொண்டு, அவர்களின் மனதினைக் கேற்க நடத்த வேண்டும்.
8. வளர்ச்சி பணி, நீண்ட, நெடிய போக்கு,அறிவு கூர்மை, தொடர்ச்சி, பொறுமை வேண்டும்.
9. இரக்கம், அன்பு, பாசம், மென்மை, திறந்த மனது, பிறருக்கு உதவுவது பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வது. நாம் பின்பற்ற வேண்டும். நாம் கண்டிப்புடன், பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்.
10. தான் தோன்றித்தனம், அதிகாரம் செய்வது, கத்துவது, திட்டுவது, தன் மனதை புண்படுத்துவது, கிண்டல் செய்வது, முரட்டுதனமாக நடப்பது, அச்சுறுத்துவது, நிர்பந்திப்பது போன்றவற்றை கைவிட வேண்டும்.
• குழந்தைகளின் ஆழ்ந்த உள்ளாற்றல்களை வெளிப் படுத்தி, வளர்க்க வல்ல கல்வி போதிக்கும் முறை. செயல் முனைப்போடு எவ்வளவுக் கெவ்வளவு புதுப்பிக்கப் படுகிறதோ அவ்வளக்கவ்வளவு அது மனிதாபிமானம் மிக்கதாய், எதிர்கால் நம்பிக்கை உள்ளதாய், மகிழ்ச்சிகரமானதாய் மாறும்.
• பாட வேளைகளின் போது தர்பார் நடத்த கூடாது. படிப்பில் புதியவற்றை அறியும் யோசனையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் சிந்தனையைக் குலைக்க கூடாது. அமைதியாக வேலை செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமையைப் பேணிக் காக்க வேண்டும்.
• தன்னால் எவற்றையெல்லாம் இனி அடைய முடியாதோ அவற்றை நோக்கி தன் மாணவர்களைத் தள்ளுபவர் உண்மையான நவீன ஆசியர் அல்ல. தன் மாணவர்களை ஊக்குவித்து எதிர் காலத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, எதிர்கால லட்சியங்களை நிலை நாட்ட இவர்களுக்குச் சொல்லித் தருவதற்காக அந்த எதிர்காலத்திலிருந்து ‘வந்தவர் தான்’ உண்மையான நவீன ஆசிரியர்.
• ஆசிரியரியலில் எளிய விஷயங்களே கிடையாது.
(குழந்தைகள் – ஆசிரியர்களின் ஆசான்கள்)
• எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் வேண்டுமெனில் நாளய தினத்தை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். தெள்ள தெளிவாக செயல் முனைப்போடு தயாராக வேண்டும்.
• பள்ளிகளில் நுழையும் குழந்தைகளின் ஞானம் புஜ்ஜியம் அல்ல.
• குடும்பம், வானொலி,தொலைக்காட்சி,நர்சரி பள்ளிகள்,பத்திரிக்கைகள்,திரைப்படம், விளையாட்டுப் பொருட்கள், மனிதர்கள்,நமது நவீன வாழ்கை, எல்லாமே குழந்தைகளை ஞானம் கொள்ளச் செய்கின்றது.
• ‘ஞானம்’ எப்படிப்பட்டதாயிருந்தாலும், அவர்கள் குழந்தைகைத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு விளையாட்டு தான் வாழ்வின் “உட்பொருள்”.
• குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர் எப்போதும் விருப்பத் தோடு செல்லட்டும். சந்திப்பதில் மகிழ்ச்சி அடையட்டும். அப்போது தான் குழந்தைகள் விருப்பத்தோடு பள்ளி வருவார்கள். ஆசிரியரைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் மகிழ்ச்சியடைவார்கள்.
• இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி தேவையா?
• குழந்தைகள் புதியன கற்றலில் மகிழ்ச்சி கொள்வார்கள்.
• வகுப்பறையில் சிரிப்பை அனுமதிப்பது. குழந்தைகளின் சிரிப்பு ஆசிரியர்களின் முக்கிய பிரச்சனையாகும்? சிரிப்பு என்பது நம்பிக்கையை வெளிபடுத்தவும், நிலையை ஊர்ஜிதப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாயிருக்கும்.
• வாழ்க்கையின் மகிழ்ச்சி
• புதியவற்றை அறியும் மகிழ்ச்சி
• கலந்து பழகும் மகிழ்ச்சி
• வளர்ந்து பெரியவர்களாகும் மகிழ்ச்சி
• குழந்தைகளுக்கு கிட்ட வேண்டும்.
வளர்ப்புப் பணிக்கு,
ஆரம்பமோ,
முடிவோ
இடைவேளைகளோ…….இல்லை

- கு.செந்தமிழ் செல்வன்.

3 comments:

  1. நல்ல பதிவு.

    இப்பதிவை பேரண்ட்ஸ் கிளப் வலையில் பதிவிட அனுமதி தேவை.

    நன்றி.

    ReplyDelete
  2. அருமையான , அவசியமான பதிவு
    நன்றி, வாழ்க வளமுடன்.
    அன்போடு வி.என்.தங்கமணி

    ReplyDelete
  3. அற்புத‌மான‌தொரு நூல் விம‌ர்ச‌ன‌ம்! தேடிப்பிடித்து வாங்கும்வ‌ரை தாங்கும் உங்க‌ள் ப‌திவின் சார‌ங்க‌ள். முத்தாய்ப்பான‌ இறுதிவ‌ரிக‌ளுக்கு ராய‌ல் ச‌ல்யூட்.

    ReplyDelete